Sunday, April 13, 2008

ஊமையாக்கி விட்டாய்....!

ஓரே வார்த்தையில்
என்னை ஊமையாக்கி விட்டாய்....
உன்னிடம்
பேசவில்லை என்று...!

வித்தியாசம் தெரியவில்லை...!

நிஜத்திற்க்கும் நிழலிற்க்கும்
வித்தியாசம் தெரியவில்லை – எனக்கு
காரணம் சிலசமயம் நிஜம் கூட
நிழலாகி போவதனால்...!

முழுமை அடைந்திருக்கும்....!

என்னவளே!
உன் சம்மதத்தை
கொஞ்சம்
தாமதமாக
சொல்லி இருக்கலாம்!
என் கவிதை
தொகுப்பாவது
முழுமை அடைந்திருக்கும்....!

ஓர் அனுமதி கொடு.....!

நீ விலகி செல்கிறாய்
ஓர் அனுமதி கொடு
உன் நிழலாவது
என் மீது விழட்டும்..!

வரம்....

முட்களே‍‍!
நீங்கள் மலராக மலர
இறைவனிடம்
வரம் கேளுங்கள்
என்னவள் சிலநேரங்களில்
செருப்பில்லாமல் நடக்கிறாள்...!

கோழை அல்ல....!

உன்னை பார்க்காமல்
போவதால் - நான்
கோழை அல்ல..!
நானும் வீரன் - தான்
உன்னை பார்க்கும் முன்பு..‍!

தினம் ஓரு உயிர்வதை...!

தினம்
ஓர் உயிர்வதை
உன்னால்
எனக்கு - நீ!
பார்த்து பேசாமல்
போவதால்....!

நேசிக்கிறேன்......

நானும்
உன்னை நேசிக்கிறேன்
தோழியாக அல்ல
என் தாயாக...

வாழ்க்கை கொடுத்திருக்கிறேன்.....!

வானத்தை சுருட்டி பேனா செய்தேன்..!
நிலவை உருக்கி மை எடுத்தேன்..!
நட்ச்சதிரங்களிருந்து வாழ்க்கை பெற்றேன்!
என்னவளே - உனக்காக
விதவையாக இருக்கும் இந்த
வெள்ளை பேப்பர்க்கு வார்த்தை - என்னும்
பொட்டு வைத்து
வாழ்க்கை கொடுத்திருக்கிறேன்.....!

கரை சேர விரும்புகிறேன்....!

கரை சேர விரும்பும்
அலைப் போல - நானும்
கரை சேர விரும்புகிறேன்
அவளின் நினைவுகளிலிருந்து....!

தற்கொலை முயற்சி...!

நிலவிற்க்கு ஏன்?
தற்கொலை முயற்சி - என்
கிணற்றில் தத்தலிக்கின்றது..!

தோல்வி..!

ஓரு லட்சம் இருக்கா!
பதில் சொல்லத்
தெரியவில்லை - நேர்காணல்
தேர்வில் தோல்வி..!

முத்துக்கள்......!

கடலில் மட்டுமல்ல
மனித உடலிலும்
முத்துக்கள்...
- வியர்வைத் துளி...!

வெண் மேகங்கள்.....!

வானமே!
உனக்குமா..?
வயதாகிவிட்டது..!

தேன்...

பூவே!
உனக்கு மட்டும்
ஏன்? இப்படி
இனிப்பான வியர்வை..!

வரதட்ச்சனை...

திருமண பட்டுபுடவையில்
இறந்து கிடப்பது பட்டுபுழுக்கள்
மட்டுமல்ல ஏழைதகப்பனின்
இதயமும் தான்....