வாசகன்
Sunday, November 1, 2009
அண்ணன் என்று..!?
என் வாழ்க்கை
தவறிபோனது - உன்
வார்த்தை தவறியதால்....?
ஏன்! என்னை
அழைத்தாய்
அண்ணன் என்று..!?
உயிர் பிறக்கிறது..!
நான் எழுதும்
உயிர்-மெய் எழுத்துக்களுக்கும்
உயிர் பிறக்கிறது - உன்
பெயரை எழுதி
உச்சரிக்கும் போது...!
என் இதயமும் தான்...!
மழையில் நீ!
நனையும் போது..?
காற்றில் கரைந்தது
மண் வாசம் மட்டுமல்ல
என் இதயமும் தான்...!
ஓரு தங்கைக்காக....!
கடவுள் மிகவும்
மோசகாரன் எல்லாவற்றையும்
கொடுத்து விட்டு
முக்கியமான ஓன்றுக்காக
ஏங்க விட்டு விட்டான்...
ஓரு தங்கைக்காக....!
Wednesday, October 21, 2009
மரணம்....!
மரணம் என்பது மனிதனுக்கு
ஓரு முறைதான்!- நான்
தினமும் செத்துகொண்டு இருக்கிறேன்
அவளை நினைத்து...!
அழகு...!
வெள்ளை காகிதமும் - இன்று
அழகாக தெரிகிறது
என் கண்களுக்கு..! - உன்னை
பற்றி எழுதும் போது..!
Sunday, September 27, 2009
ஈரம்..!?
எல்லொருடைய மனதில்
இருக்க வேண்டியது
தெருயேரத்தில்
மட்டும் ..!
Saturday, September 26, 2009
விதவை..!
உடுத்திய ஆடை
மட்டுமல்ல..!
அவளின் உள்ளமும்
வௌ்ளை தான்..!
Monday, August 31, 2009
நீ எங்கு இருக்கிறாய்.. என் தோழி்யே
என் தோழி்யே - நீ
எங்கு இருக்கிறாய்..!
நித்தம் நான் தேடுகிறன் - உன்
கலங்கம் இல்ல நட்பை
எப்போது கிடைப்பாய் நீ!
என் தாயின் கருவரையை
அடுத்து தலைசாய
தேடுகிறன் உன் தோழ்களை.
எப்போது கிடைப்பாய் நீ!
கடைசி வரை - என்னை
தேட வைக்காதே!
விரைவில் வந்து
விடியலை காட்டு எனக்கு..!
Friday, May 29, 2009
கானல் நீர்.....!
என் காதலும்
கானல் நீர்
போலத்தான்..! - நானும்
ஏமாந்து போனேன்
தண்ணீர்க்கு ஏங்கும்
பறவை போல...!
பொறுமை....!
பெண்ணே
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் சொல்ல
என் கல்லறைக்கா
வருவது....!
Saturday, May 23, 2009
பாத சுவடுகள்...
மணல் சிற்பகலைஞர் கூட
தோற்று போவான்..!
கடற்க்கரை மணலில் - உன்
பாதம் வடிக்கும்
சிற்பத்தை கண்டு..!
எதற்கு வந்தாய் ...?
எதற்கு வந்தாய்
இலங்கையிருந்து- அகதியாய்..?
என் இதயத்தில்
குடியேறவா...!
Thursday, March 26, 2009
ஞாபகப்படுத்துகிறாய்..!
தினமும்
ஞாபகப்படுத்துகிறாய்..!
நான் - என் அண்ணணுக்கு
மட்டும் தங்கை என்று..!
Monday, February 23, 2009
பேனா...!
என்னவளே உன்னை
வர்ணித்து எழுதிய
பேனா இப்போது
எழுத மறுக்கின்றது - எனென்றால்
உன்னை வர்ணித்து
எழுத வார்த்தைகள்
இல்லை என்பதலோ...!
காரணம் அறிந்தேன்..!
நிலவே நீ!
இரவில் வருவதன்
காரணம் அறிந்தேன் - என்னவள்
பகலில் வருவதால் தானோ...!
வாசம்...!
மண்ணிற்க்கு வாசம்
மழைபெய்வது மட்டுமல்ல
என்னவளின்- பாதம்
படும்போது தான்...!
மனசு...!
என்னவளின்
முதல் பார்வையில்
என்னிடம் இருந்து
பரிபோன ஓன்று...!
Friday, January 23, 2009
இளவட்ட புயல் நீ...
இளவட்ட புயல் நீ...!
இடைந்சல்களை கண்டு நிற்காதே!
புரட்சி பரம்பரை நீ...!
புதுமுகமாய் எண்ணாதே!
விதைக்க பிறந்தவன் நீ...!
விழ்ச்சிக்கு வருந்ததே!
சரித்திதம் நீ!
சிறுகதை ஆகாதே!
உதைக்க பிறந்தவன் நீ...!
பந்தாக இருக்காதே!
ஏழு! விழி! உழை! - இனி
உழைப்புக்க உதரணம்
இமயமல்ல - இனி
நீதான் நண்பனே!
நட்பு..!
வெளிச்சத்தில்
தொலைத்தை இருட்டில்
தேடுகின்றேன் - இன்று
அம்மாவாசையாக நான்....!
Thursday, January 22, 2009
பூகம்பம்...!
கல்லறையில் கூட
நிம்மதியான
உறக்கம் இல்லை
- பூகம்பம்...!
Tuesday, January 20, 2009
மழை..!
வெண்மேகமே!
காதல் தோல்வி - என்பது
நம் இருவருக்கும்
போதுவானது தான்! - நீயோ
வெளி காட்டுகிறாய்
மழையாய்...!
நானோ உள்ளுக்குள்ளே...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)