Sunday, June 8, 2008

காதல்...!

உச்சரித்து பாருங்கள்
உதடுகள் கூட ஓட்டுவதில்லை
- காதல்...!

முத்தம்.........!

அவளின் உதட்டு ஈரம்
அச்சனது - என்
இதழில் அல்ல
என் இதயத்தில்....!

உனக்காக....!

உனக்காக பல
பலவற்றை விட்டுக்கொடுத்த - நான்
இப்போது என்னையும் விட்டு
கொடுக்கிறேன் உனக்காக...!

தேடி நின்றேன்....!

நேசமுடன் ஓரு மலரை - நான்
தேடி நின்றேன் - அது
பேச தினம் மறுத்ததினால்
வாடி நின்றேன்...!

மரணம்...!

சில நிமிடம்
இதயம் நின்றுவிடுகிறது
நீ - மற்றவர்களிடம்
விளையாடும் போது....!

கனவு...!

நிஜத்தி்ல்
முடியாததை
நிழலில்
சாதிக்கின்றேன்....!

விட்டுக் கொடுத்தல்...!

காதல் என்பது
விட்டுக் கொடுத்தல்!
சில சமயம் காதலேயே
விட்டுக் கொடுத்தல்

தற்கொலை...!

தினமும்
தற்கொலை
செய்துகொள்கிறது - அந்த
ஓற்றை ரோஜா நீ!
பார்த்து, பறிக்காமல்
போவதால்...!

முகப்பரு..!

பனித்துளி
சிந்தியிருப்பது
பூக்களில் மட்டுமல்ல!
என்னவளின்
முகத்திலும் தான்!
- முகப்பரு..!

லூசு..!

காகிதத்தில்
எழுதப்பட்ட வார்த்தை
இன்று நிஜமானது
லூசு..!

?....!

கேள்விகுறிக்கும்(?) ஆச்சிரியகுறிக்கும்(!)
வித்தியாசம் கேட்டேன் அன்று.
இப்போது பதில் சொன்னாய்
நீ! ஆச்சிரியகுறியாய் நான் கேள்விகுறியாய்..?

கவிதையாய் பிறக்கும்..!

உறவுகள் யாவும் - தினம்
பிரிந்த பின்பு தானே
உள்ளத்தை மயக்கும் - நீ!
என்னை விட்டு பிரிந்தலும்
உன் நினைவுகள் என்றும்
என் நெஞ்சில்
கவிதையாய் பிறக்கும்!

நினைவுகள்..!

நிஜத்தில் எழுதியதை
அழிக்க முடிந்த - எனக்கு
நிழலில் நினைத்தை
அழிக்க முடியவில்லை...!

நினைவு தடங்கள்...!

கடற்க்கரையில்
உள்ள - நமது
கால் தடங்களை
அழிக்க
போராடி கொண்டிருக்கிறது
கடல் அலை..!
அதற்க்கு ஏப்படி
தெரியும் அவை
கால் தடம் இல்லை - நம்முடைய
நினைவு தடம் என்று..!