Saturday, December 22, 2007

மனித நேயம்......!



கல்லறைகள்
பெருகிவிட்டன
உடல்களுக்கு அல்ல
- மனித இதயங்களுக்கு...!

Friday, December 21, 2007

முத்தம்.........!





அவளின்
உதட்டு ஈரம்
அச்சனது - என்
இதழில் அல்ல
என் இதயத்தில்....!

சிலந்திகள்.......!




நெசவுத்தொழில்
செய்தும்
நிர்வாணமாய்
- சிலந்திகள்.......!

Thursday, December 20, 2007

விதவை....!



பெண்ணே!
நீ! சுமங்கலியாக
இருக்க என்னை
விதவையாக்கிவிட்டாய்! - பூச்செடி..!



Wednesday, December 19, 2007

கடவுள்......!



உள்ளே
வைத்துக்கொண்டு
உலகமெல்லாம்...
தேடுகின்றான்
மனிதன்...!

தானம்.....!


யாரவது
வாங்கிக்கொள்ளுங்கள் - இந்த
ஓரு சாண் வயிற்றை
- பசி பொறுக்கமுடியவில்லை...!

பசி......!





வெளிச்சமில்லாமல்
எரிகின்றது...
ஏழையின் வயிறு...!

Thursday, December 13, 2007

அன்போடு வேண்டுகிறன்...

அன்போடு வேண்டுகிறன்...
காற்றாய் வாழவேண்டிய வயதில்
கற்பூரமாய் கரைந்து விடாதே..!

இளமை என்பது இனிப்பு அத்தியாயம்
சோக சிலுவைகளை சுமந்து
சிறகுகளை சேதபடுத்தி கொள்ளாதே!

நீ! கிழ் இறங்கி வா!
மலைகளிலிருந்து கிழிறிங்கி வருவது
நதிக்கு பெருமை!

விண்னை நிரகரித்து மழை
மண்னோடு கலப்பது
மழைக்கு பெருமை!

முள்ளாய் வாழ்ந்து முடிவதற்க்கா
வாழ்க்கை மலராய்
வாழ்ந்து மனம் கொடு...!

Wednesday, December 12, 2007

காதல் என்றால்.....!

சூரியன் என்றால்
உதிப்பதும், மறைவதும்..!
நிலவு என்றால்
இரவு, குளிர்ச்சியும்...!
கவிதை என்றால்
வார்த்தையும், வாழ்க்கையும்..!
காதல் என்றால்
எமாற்றுவதும்
ஏமாறுவதும் தானோ...!

Sunday, December 2, 2007

கவிதை வற்றாது...

சூரியன் உள்ளவரை
பகல் வற்றாது!
நிலவு உள்ளவரை
இரவு வற்றாது!
வானம் உள்ளவரை
பூமி வற்றாது!
காலம் உள்ளவரை
காதல் வற்றாது!
காதல் உள்ளவரை
கவிதை வற்றாது...!