Sunday, November 1, 2009

அண்ணன் என்று..!?

என் வாழ்க்கை
தவறிபோனது - உன்
வார்த்தை தவறியதால்....?
ஏன்! என்னை
அழைத்தாய்
அண்ணன் என்று..!?

உயிர் பிறக்கிறது..!

நான் எழுதும்
உயிர்-மெய் எழுத்துக்களுக்கும்
உயிர் பிறக்கிறது - உன்
பெயரை எழுதி
உச்சரிக்கும் போது...!

என் இதயமும் தான்...!

மழையில் நீ!
நனையும் போது..?
காற்றில் கரைந்தது
மண் வாசம் மட்டுமல்ல
என் இதயமும் தான்...!

ஓரு தங்கைக்காக....!

கடவுள் மிகவும்
மோசகாரன் எல்லாவற்றையும்
கொடுத்து விட்டு
முக்கியமான ஓன்றுக்காக
ஏங்க விட்டு விட்டான்...
ஓரு தங்கைக்காக....!