Tuesday, August 19, 2008

போராட்டம்..!

நானும்
கடல் அலையும் - ஏறக்குறைய
ஓன்று தான்...!
போராடிக்கொண்டே இருக்கிறோம்
வாழ்க்கையில் வெற்றி பெற..!

Thursday, August 14, 2008

பொறுமை..!

பெண்ணே
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் கடிதத்தை
என் கல்லறைக்கா
கொண்டு வருவது....!

பொறுமையாக செல்லவும்..!

பொறுமையாக
செல்லவும்
சாலையில் - அல்ல
வாழ்க்கையில்..!

அழகு..!

நீ! உச்சரிக்கும்
வார்த்தை கூட
அழகு தான்! - உனக்கும்
எனக்கும் என்ன
சம்மந்தம் என்று..!

நீ யார்..!?

இது கூட அழகாக
இருக்கிறது - யாரும்
என்னை பார்த்து கேட்காத
கேள்வி? நீ! யார் என்று..!

தேடுகிறேன்....

எனக்குள் உன்னை
தொலைத்து விட்டு
தேடுகிறேன் என்றாவது - நீ!
கிடைக்கமாட்டாய என்று...!

Wednesday, August 13, 2008

சத்துணவுக்காக...!

மழலைகள் மகிழ்ச்சியோடு
பள்ளிக்கு சென்றன
சத்துணவுக்காக...!

நிலவு...!

அமாவாசையில்
நிலவு...
எதிர் வீட்டுச் சன்னலில்...!

காதல்..!

மலர்கள் தேனைச்
சுரக்க மறுத்தாலும்
வண்டுகள் மலரைச்
சுற்றுவதை விடுவதில்லை..!

காதல்..!

காதல் ஓரு வாக்கியம்
எழுதி முடிபதற்க்குள்
நாம் சந்திப்பது வெறும்
எழுத்துப் பிழைகளே..!